அடேங்கப்பா.. உலகநாயகன் வேற லெவலு!! சொன்னபடி வீடியோவை லீக் செய்த இயக்குனர் லோகேஷ்!! மிரண்ட ரசிகர்கள்!!

அடேங்கப்பா.. உலகநாயகன் வேற லெவலு!! சொன்னபடி வீடியோவை லீக் செய்த இயக்குனர் லோகேஷ்!! மிரண்ட ரசிகர்கள்!!logesh-kanagaraj-shares-kamal-hardwork-video

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரி இறைத்து வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளனர்.

விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. விக்ரம் படம் வெளியாகி 25 நாட்கள் கடந்தநிலையில் 400 கோடிக்கு மேல் வசூலை ஈட்டி வருகிறது.
இந்த படத்திற்காக 68 வயதிலும் கமல் கடுமையாக உழைத்துள்ளார்  ஒவ்வொரு காட்சியும் சரியாக வரவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து நடித்துள்ளார். 

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது படத்தின் இறுதி காட்சியில் ராட்சச துப்பாக்கியால் சுடும் போது கைகள் நன்கு பெரிதாக தெரிய வேண்டும் என இயக்குனர் லோகேஷ் கூறியுள்ளார். உடனே கமல் கிடைத்த 10 நிமிடத்திற்குள் வேக வேகமாக தண்டால் எடுத்து கையை பெரிதாக்கி வந்து உடனே நடித்தாராம்.

மேலும் அந்த வீடியோவை படம் ரிலீசுக்கு பிறகு வெளியிடுவேன் என லோகேஷ் கூறியிருந்தாராம். இந்நிலையில் கமல் தண்டால் எடுத்த வீடியோவை பகிர்ந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நான் சொன்னபடி செய்துவிட்டேன். இதில் கமல் சார் 26 முறை தண்டால் எடுத்தார். நான் முதல் இரண்டை மிஸ் செய்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் கமலை பாராட்டி வருகின்றனர்.