லியோ படத்தை பார்த்துவிட்டு தளபதியின் ரியாக்சன் என்ன தெரியுமா.?

லியோ படத்தை பார்த்துவிட்டு தளபதியின் ரியாக்சன் என்ன தெரியுமா.?


Leo update news

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

vijay

இதனையடுத்து நிறைவு செய்யப்பட்ட  படத்தை பட குழுவினர் திரையரங்கில் பார்த்து கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது இளைய தளபதி விஜய் தனி ஸ்க்ரினில் இப்படத்தை பார்த்து கருத்து கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, லியோ திரைப்படம் பார்த்துவிட்டு பட குழுவினரிடம் மகிழ்ச்சியும் திருப்தியும் அளிப்பதாக கூறியுள்ளார். இதன்படி லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

vijay

மேலும் தற்போது இளைய தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தளபதி 68 படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதையடுத்து தொடர்ந்து படப்பிடிப்புக்கான பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.