நடிகர் விஜய் லியோ படத்தை பார்க்க விரும்பவில்லையா.. பிரபல தயாரிப்பாளரின் அதிர்ச்சி தகவல்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் இளைய தளபதி விஜய். இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களை அளித்து தனக்கென தனி இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்துள்ளார்.

தற்போது விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், விஜய் சேதுபதி போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டு அக்டோபர் 17ஆம் தேதியன்று திரையில் வெளிவரவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர்.

இது போன்ற நிலையில், 'லியோ' படத்தின் தயாரிப்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். அவர் கூறியதாவது, "லியோ படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டேன். படம் சூப்பராக வந்திருக்கிறது. விஜய் இன்னும் லியோ படத்தை பார்க்கவில்லை" என்று கூறியிருக்கிறார். இதனால் பத்திரிக்கையாளர்கள் படத்தின் கதாநாயகனே ஏன் இன்னும் படத்தை பார்க்க விரும்பவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.