சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் திருமணம் செய்த சசிகுமார் பட நடிகை.!

சூப்பர் ஸ்டார் குடும்பத்தில் திருமணம் செய்த சசிகுமார் பட நடிகை.!



Lavanya tripathi get married varum Thej

தமிழில் சசிகுமார் நடித்த பிரம்மன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் லாவண்யா திரிபாதி. அதைத்தொடர்ந்து மாயவன் என்ற திரைப்படத்திலும் நடித்தார். மேலும் இவர் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

Nagababu

இதனிடையே பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்த நிலையில், கடந்த மாதம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில் இவர்களது திருமணம் இன்று இத்தாலியில் நடைபெற்றுள்ளது. தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Nagababu

நடிகர் வருண் தேஜ் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபு மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணத்தில் அவர்களது குடும்பத்தை சேர்ந்த முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.