விஜய் அரசியலில் நுழைவதால் சினிமாவை விட்டு விலகுகிறாரா.? விஜயின் கடைசி படம் இதுதானா.! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் இளையதளபதி விஜய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை பெற்று இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் இவரது தந்தையின் மூலமே தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டு தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வருகிறார் இளைய தளபதி விஜய்.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் 'லியோ' திரைப்படம் விரைவில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற நிலையில், நடிகர் விஜய் அரசியலில் நுழையப் போகிறாரா என்று இவரது சமீபத்திய செயல்கள் கேள்வி ஏற்படுத்துகின்றன. பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார் விஜய். இதனால் விஜய் இனிமேல் திரைபடங்களில் நடிக்கப் போவதில்லை என்ற கேள்வி திரைத்துறையினருடனும், மக்களிடையும் ஏற்பட்டு வருகிறது.