22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது 'ஆளவந்தான்' திரைப்படம்.! எப்போ தெரியுமா.?



latest-news-about-kamal-movie-rereleased

தயாரிப்பாளர் தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த திரைப்படம் "ஆளவந்தான்". இந்தப் படத்தில் கமலஹாசன் வில்லனாகவும், கதாநாயகனாகவும் இரட்டை வேடங்களில் நடித்து மிரட்டியிருந்தார். 

kamal

மேலும் படத்தில் மனீஷா கொய்ராலா, அனுஹாசன், பாத்திமா பாபு, ரியாஸ் கான், சரத் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சங்கர் எஹேசான் லாய் என்பவர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஒரு நபரின் உளவியல் ரீதியான மனச் சிக்கல்களைப் பற்றி பேசியது இந்தப் படம்.

இதே நாளில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான "ஆளவந்தான்" திரைப்படம் இன்றுடன் 22 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தனது ட்விட்டர் பக்கத்தில், "எழிலோடும் பொழிலோடும் ஆளவந்தான் விரைவில் வெள்ளித்திரையில்" என்று பதிவிட்டுள்ளார்.

kamal

மேலும் இந்த செய்தியுடன் ஒரு போஸ்டரையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் உலகெங்கிலும் உள்ள 1000 திரையரங்குகளில் ஆளவந்தான் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளது கமல் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.