"கமலின் ஆதியும், அந்தமுமாக இருக்கும் பிரபலத்தின் மனைவி!" யார் என்று தெரியுமா!

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்ட கலைஞராக பரிணமிப்பவர் கமலஹாசன். "உலக நாயகன்" என்று அனைவராலும் அழைக்கப்படும் கமலஹாசன் "விக்ரம்" பட வெற்றியின் மூலம் இன்றும் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தான் என்று நிரூபித்துள்ளார்.
சினிமா, பிக் பாஸ், அரசியல் என்று தற்போது கமல் பிசியாக இருந்தாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சர்ச்சைகள் நிரம்பியதாகவே உள்ளது. 1978ம் ஆண்டு கமல், நடனக் கலைஞரான வாணி கணபதியைத் திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகளில் இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து நடிகை சரிகாவை கமல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்ஷரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சரிகா கமல் படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றினார். இவரும் 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிட்டார்.
இதையடுத்து நடிகை கௌதமியுடன் லிவ் இன் உறவில் இருந்து வந்தார் கமல். இந்நிலையில் கௌதமியும் கமலைப் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது பிரபல நடன இயக்குனர் ராம்ஜியின் மனைவி அமிர்தா தான், கமலின் சினிமா, பிசினஸ் என்று அனைத்தையும் கவனித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.