லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை விவகாரம்! முதல்கட்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

லக்ஷ்மன் ஸ்ருதி ராமன் தற்கொலை விவகாரம்! முதல்கட்ட விசாரணையில் வெளியான பகீர் தகவல்!


Lakshman shruthi owner suicide case update

தமிழகத்தில் மிகவும் பிரபலமான இசை குழுவில் ஓன்று லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழு. இதன் உரிமையாளர்கள் ராமன் - லக்ஷ்மன் சகோதரர்கள். இதில் சென்னை அசோக் நகரில் உள்ள தன் வீட்டில் ராமன் சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இசை உலகில் மிகவும் பிரபலமாக இருந்த ராமன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்நிலையில் ராமனின் திடீர் தற்கொலைக்கு என்ன காரணம் என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதில், கடந்த சில மாதங்களாக கடும் உடல்நலக் குறைவால் ராமன் பாதிக்கப்பட்டதாகவும், இறப்பதற்கு முன் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இசை நிகழ்ச்சியை அவர் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

suicide

இசை நிகழ்ச்சியில் இருந்து பாதியிலையே வெளியேறிய ராமன் அடுத்த நாள் தற்கொலை செய்துள்ளார். மேலும் ராமன் நீண்ட காலமாக சர்க்கரை நோய், இதய அடைப்பு, மூலம் போன்ற பல வியாதிகளால் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும், இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.