திருமணத்திற்கு அடுத்த நாள்.. கணவருடன் ஜோடியாக நடிகை குஷ்பு! ப்பா..எப்படி இருக்காங்க பார்த்தீர்களா!!

திருமணத்திற்கு அடுத்த நாள்.. கணவருடன் ஜோடியாக நடிகை குஷ்பு! ப்பா..எப்படி இருக்காங்க பார்த்தீர்களா!!


kushbu-with-her-husband-sundar-c-photo-viral

தமிழ் சினிமாவில் வருஷம் 16 என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை குஷ்பு. அதனைத் தொடர்ந்து அவர் 80ஸ் காலகட்டங்களில் பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் எக்கச்சக்க படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் அவர் வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் களமிறங்கி பல தொடர்களில் நடித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

நடிகை குஷ்பு, இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களை பிஸியாக இருக்கும் நடிகை குஷ்பு அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது குஷ்பூ திருமணத்துக்கு அடுத்த நாள் கணவர் சுந்தர்.சி-யுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி அதற்கு லைக்ஸ்குகள் குவிந்து வருகிறது.