முதல் ஷோவுக்கு ஆசைப்பட்டு கால்களை உடைத்துக்கொண்ட விஜய் ரசிகர்.! ஆட்டோவில் அள்ளிப்போட்டு மருத்துவமனைக்கு சென்ற பரிதாபம்.!

முதல் ஷோவுக்கு ஆசைப்பட்டு கால்களை உடைத்துக்கொண்ட விஜய் ரசிகர்.! ஆட்டோவில் அள்ளிப்போட்டு மருத்துவமனைக்கு சென்ற பரிதாபம்.!



Krishnagiri Hosur Vijay Fan Leg Fracture 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரில் செயல்பட்டு வரும் அக்சயா திரையரங்கில், இன்று விஜயின் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் காலை 09:00 மணியளவில் திரையிடப்பட்டது. 

இதற்காக விஜய் ரசிகர்கள் அனைவரும் ஏற்கனவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றிருந்த நிலையில், விஜய் ரசிகர் ஒருவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 

அவர் திரையரங்கு பணியாளர்களிடம் டிக்கெட் கேட்டு மன்றாடி பார்த்தும், இருக்கைகள் இல்லாத காரணத்தால் டிக்கெட் கொடுக்க இயலாது., அடுத்த காட்சிக்கு படம் பார்க்கலாம் என கூறியுள்ளனர். 

முதல் காட்சி எப்படியேனும் பார்த்தாக வேண்டும் என எண்ணிய ரசிகர், திரையரங்கின் சுவரை ஏறிக்குதித்து படம் பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது, மதில் சுவர் உயரமாக இருந்ததால், கீழே குதித்த விஜய் ரசிகரின் கால்கள் முறிந்தது. 

இதனால் வலியால் கதறிய அவரை மீட்ட திரையரங்கு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் சம்பந்தப்பட்ட நபரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 

அவர்கள் ஆட்டோவை அழைத்து வந்து, கால்கள் முறிந்த நிலையில் கிடைத்தவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.