இலவச அவசர ஊர்தி சேவையை தொடர்ந்து, இலவச ஆட்டோ சேவை: கேபிஒய் பாலா நெகிழ்ச்சி செயல்.!kpy-bala-free-auto-service-started

 

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் கேபிஒய் பாலா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவசர ஊர்தி சேவையை தொடங்கி வைத்து பலரின் கவனத்தையும் பெற்றார். 

அதனைத் தொடர்ந்து, சென்னை பெரு வெள்ளத்தின் போது தன்னிடம் இருந்த ரூபாய் 2 லட்சம் பணத்தை ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் என பிரித்து கொடுத்தார். 

இந்நிலையில், சென்னையில் உள்ள அனகாபுத்தூர், பம்மல், பல்லாவரம் பகுதிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ அவசரத்திற்கு அணுகும் வகையில் 24 மணி நேர இலவச ஆட்டோ சேவையை அவர் தொடங்கி வைத்திருக்கிறார்.

இலவச ஆட்டோ சேவைக்கு அழைப்புக்கு: 91768 78751