சினிமா

பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோயினாகும் சூர்யா 41பட நடிகை! அட.. ஹீரோ யார்னு பார்த்தீங்களா!!

Summary:

பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோயினாகும் சூர்யா 41பட நடிகை! அட.. ஹீரோ யார்னு பார்த்தீங்களா!!

தெலுங்கில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த உப்பென்னா என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் நடிகை க்ரீத்தி ஷெட்டி. அவர் தனது முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரத் துவங்கியுள்ளார்.

இந்த நிலையில் நடிகை க்ரீத்தி ஷெட்டி தற்போது தமிழ் சினிமாவில் சூர்யாவின் 41வது படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படத்தை பாலா இயக்கவுள்ளார். 
அதனைத் தொடர்ந்து க்ரீத்தி ஷெட்டி நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் புதிய படம் உருவாகிறது. அதில் நாகசைதன்யா ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement