தமிழகம் சினிமா

வித்தியாசமாக கிகி சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்!.

Summary:

வித்தியாசமாக கிகி சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்!.


அதாவது கனடாவை சேர்ந்த டிரேக் என்ற பிரபல ராப் பாடகர் எழுதி வெளியிட்ட ”கி கி டூ யு லவ் மீ (kiki do you love me)” என்ற  இன் மை பிலிங்ஸ் ஆல்பத்தின்  பாடல் பின்பக்கம் ஓட, காரோ, பைக்கோ, ரயிலிலோ பயணம் செய்பவர்  கீழே இறங்கி, டான்ஸ் ஆடி கொண்டே வாகனத்தை பின்தொடர வேண்டும். அதுதான் சேலஞ்ச்.

இந்த விபரீத முயற்சியில் ஈடுபடும் பலரும்  கோர விபத்துகளில் சிக்குகிறார்கள். கார்களும் சேதமாகிறது என இம்முயற்சிக்கு சமூக நல ஆர்வலர்களும் போலீசாரும் கடும் எதிர்ப்பு  தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனாலும் இந்த சேலஞ்சை பிரபலங்கள் முதல் பலரும் செய்து கொண்டுதான் வருகின்றனர். அதேபோல் சில நாட்களுக்கு முன் நடிகை ரெஜினாவும்,பாலியல் வன்முறை தொடர்பாக பரபரப்பை கிளப்பி வரும் நடிகை ஸ்ரீரெட்டியும்  இந்த காரிலிருந்து இறங்கி கிகி சேலஞ்சை செய்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தனர் 

இதனையடுத்து முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் இந்த கிகி சேலஞ்ச் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார். ஆனால் காரில் இல்லாமல் இந்த சேலஞ்சை பாதுகாப்பாகவும் செய்யலாம் என்றபடி வீல்சேரில் ஒரு நடிகருடன் செய்துள்ளார்.மேலும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


Advertisement