keerthy-suresh-got-new-friend
நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு புதிதாக கிடைத்த நண்பர்...! கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்...!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவரான நடிகர் விஷால் நடித்து லிங்குசாமி இயக்கிய மெகா ஹிட் படம் சண்டக்கோழி. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் இணை நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கிறார். இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.
மேலும் இந்த படத்தை பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில்: இந்த படத்தின் மூலம் நடிகர் விஷால் அவர்கள் எனக்கு நல்ல நண்பராக கிடைத்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார். அவ்வப்போது சாவித்ரி வாழ்க்கை சரித்திர படம் "நடிகையர் திலகம்" படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் இந்த படத்திலும் நான் நடித்து வந்தேன். நடிகையர் திலகம் படத்தின் ஷூட்டிங் சோகம், ஆக்ரோஷம் என பலவிதமான காட்சிகளில் நடித்து டென்ஷனாக இருப்பேன்.
மேலும் நான் நடிகையர் திலகம் ஷூட்டிங் முடிந்து சண்டக்கோழி 2 ஷூட்டிங் வரும்போது ரொம்பவும் ஜாலியான சூழல் நிலவும். விஷால், லிங்குசாமி எல்லோருமே படக்குழுவை உற்சாகப்படுத்தி ஷூட்டிங் நடத்திச் செல்வார்கள் இதனால் சாவித்ரி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட டென்ஷன் இதில் குறைந்து ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்’ என்றார். மேலும் இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக பிடித்த விதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement