சம்மர்ல இதைவிட எது பெஸ்ட்டா இருக்கும்? கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தைக் கண்டு கிறங்கிபோன நெட்டிசன்கள்!!

சம்மர்ல இதைவிட எது பெஸ்ட்டா இருக்கும்? கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தைக் கண்டு கிறங்கிபோன நெட்டிசன்கள்!!


keerthi-suresh-yellow-dress-photo-viral

தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரஜினிமுருகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் தற்போது மஞ்சள் நிறத்தில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் புடவை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, சம்மர் காலத்தில் மஞ்சள் நிறத்தை விட எது சிறந்ததாக இருக்கமுடியும்? என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.