ஆதிபுருஷ் படத்தில் ராமராகும் பிரபாஸ்! அவருக்கு ஜோடியாக, சீதாவாக நடிக்கப்போவது இவங்கதானா? வெளியான அசத்தல் தகவல்!



keerthi-sanon-act-as-seetha-in-prabhas-aadhipurush-movi

பாகுபலி நடிகர் பிரபாஸ் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இது அவருக்கு 21-வது படம் ஆகும். இப்படத்தை பூஷண் குமார் தயாரிக்கவுள்ளார்.  3டி தொழில்நுட்பத்தில் பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த திரைப்படம் இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகி, தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் ராமாயணத்தை மையமாக கொண்டு உருவாகுவதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தில் பிரபாஸ் ராமராக நடிக்க உள்ளார். மேலும் அவரை எதிர்க்கும் ராவணனாக பாலிவுட் நடிகர் சயீப் அலி கான் நடிக்கிறார்.

prabas

 இந்த நிலையில் இப்படத்தில் ராமருக்கு ஜோடியாக சீதையாக நடிக்கப்போவது யார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், பாலிவுட் நடிகை கீர்த்தி சனன் சீதையாக, பிரபாஸ்க்கு ஜோடியாக நடிக்கஉள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இதற்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ், தீபிகா படுகோன் என பல முன்னணி பெயர்ள் இத்தகைய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.