ரஜினி படங்களை மறந்துடுவாங்க.! எப்போதும் நிலைத்து நிற்பது கமல்தான்.!சலசலப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்!!

ரஜினி படங்களை மறந்துடுவாங்க.! எப்போதும் நிலைத்து நிற்பது கமல்தான்.!சலசலப்பை ஏற்படுத்திய பிரபல நடிகர்!!


Kavithalaya krishnnan talk about rajini kamal

தமிழ் சினிமாவில் முன்னணி டாப் நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல். கமல் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் பெருமளவில் ஹிட்டாகவில்லை. 

 ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அவர் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இரு படங்களில் நடிக்கவிருப்பதாகவும், பின் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கிறார் எனவும் தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய நடிகர் கவிதாலயா கிருஷ்ணன், ரஜினியின் படங்கள் பெரும் வெற்றியை பெற்றாலும் காலபோக்கில் அந்த படங்களை ரசிகர்கள் மறந்து விடுவார்கள். ஆனால் கமல் படங்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. அன்பே சிவம், குணா போன்ற படங்கள் காலத்தால் அழியாத படங்களாக ரசிகர்களின் மனதில் இன்னும் நிலைத்து நிற்கிறது என கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.