நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்துக்கு நன்றி கூறிய கவின்! ஏன்? என்ன காரணம் தெரியுமா?kavin-thank-to-sivakarthickeyan-and-anirudh

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். கவின் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் களமிறங்கி நட்புனா என்னா தெரியுமா?  என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில், ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவான லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. லிப்ட் படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

 இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ஹே ப்ரோ என்ற பாடல் ஜூலை 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு ரிலீசாக உள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். மேலும் அனிருத் வெளியிடவுள்ளார். இந்நிலையில் இப்பாடலை பாடிய சிவகார்த்திகேயனுக்கும், பாடலை ரிலீஸ் செய்ய ஒப்புக்கொண்ட அனிருத்துக்கும் கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி கூறியுள்ளார்.