அடுத்த சீன் இதுதானா? டாக்டர் கெட்டப்பில் கெத்து காட்டும் சிறக்கடிக்க ஆசை மீனா!
நயன்தாரா படத்தில் நடிக்கும் கவின்! அட.. படத்தலைப்பை பார்த்தீர்களா! கியூட்டான வீடியோவுடன் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் ஹீரோவாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அங்கு அவர் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து செய்த ரகளைகள், லாஸ்லியாவுடன் காதல் என மேலும் பிரபலமானார்.
கவின் சின்னத்திரையில் மட்டுமின்றி, வெள்ளித்திரையிலும்
நட்புனா என்னா தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், வினீத் வரப்பிரசாத் இயக்கத்தில் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். திகில் கலந்த அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் கவனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
And on this auspicious day, we are super happy to announce our next project starring @Kavin_m_0431, directed by @arunpatrician and produced by Yours Truly! 🔥🔥♥️♥️@VigneshShivN #Nayanthara @Kavin_m_0431 @arunpatrician @DoneChannel1#OorKuruvi #Kavin03 #RowdyPictures pic.twitter.com/3Bv2zlJNyz
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) October 15, 2021
இந்த படத்தை தொடர்ந்து கவின்
அடுத்ததாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அறிமுக இயக்குனர் அருண் இயக்கும் இந்த படத்திற்கு ‘ஊர்குருவி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு க்யூட்டான வீடியோவுடன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.