"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
நள்ளிரவில் இருட்டில் லாஸ்லியா, கவின் செய்த காரியம்.!! குறும்படம் போட்டு அம்பலப்படுத்தப்பட்ட ரகசியம்!!
பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் தொகுத்து வழங்க மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்ஷி ஆகியோர் கடந்த நாட்களில் வெளியானர். அதனை தொடர்ந்து வைல்டுக்கு கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
பின்னர் விருந்தினராக மற்றொரு போட்டியாளராக வனிதா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் வந்ததுமே பல பிரச்சினைகள் வெடித்து வீடே இரண்டானது. இந்நிலையில் கடந்த வாரம் அபிராமி குறைந்த ஓட்டுக்களை பெற்று வெளியேறியநிலையில், தற்கொலை முயற்சி மேற்கொண்டதற்காக நடிகை மதுமிதா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், சாண்டி, கவின் சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களில் யார் வெளியேற உள்ளனர் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், கமல் அதிரடியாக இன்று விளக்கப்படம் ஒன்றினைப் போட்டு அதிர்ச்சி கொடுக்கும் பிரமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கவின், லாஸ்லியா இருவரும் நள்ளிரவில் இருட்டில் மைக்கை கழட்டிவிட்டு தனியாக பேசியுள்ளனர்.மேலும் இதனால் லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க்கில் முழு மதிப்பெண்கள் கொடுத்த பிக்பாஸ் 500 மதிப்பெண்களைக் குறைத்துள்ளார். இதனையே கமல் குறிப்பிட்டு பேசவுள்ளார் என கூறப்படுகிறது.
#Day62 #Promo2 #பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/5Wvus21Krm
— Vijay Television (@vijaytelevision) August 24, 2019