கவினை அறைந்துவிட்டு, லாஸ்லியாவை பார்த்து நறுக்கென அவரது நண்பர் கூறிய வார்த்தைகள்.! லீக்கான நீக்கப்பட்ட வீடியோ!!
பிக்பாஸ் சீசன் மூன்று 80 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு, மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்ஷண், வனிதா ஆகியோர் மட்டுமே உள்ளனர் . மேலும் கடந்த வாரம் சீக்ரட் ரூமில் அடைக்கப்பட்ட சேரன் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர பலருக்கும் சந்தோசம் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்றைக்கு முந்தையநாள் முதல் புதிய டாஸ்க் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தருகின்றனர்.

அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் கவினின் நண்பர் வருகை தந்தார். அவர் கவினிடம் அறிவுரை கூறி திட்டியுள்ளார். பின்னர் யாரும் எதிர்பார்க்காதநிலையில் கவினை பளாரென அறைந்துள்ளார். இது போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பார்வையாளருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதைத்தொடர்ந்து அவர் , லாஸ்லியாவிற்கு அறிவுரை வழங்கியுள்ளார். அப்பொழுது அவர் லாஸ்லியாவைப் பார்த்து உன்னை நம்பி ஒரு நாடு இருக்கு, உனக்குனு ஒரு இமேஜ் வேற இருக்கு, இதெல்லாம் கெடுத்துககொள்ளாதே என கூறியுள்ளார். அந்த வீடியோ காட்சி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாத நிலையில் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
kavin friend convo with losliya ..! yesterday unseen video pic.twitter.com/tunhl5DSMK
— Rajkumar Kannan (@imrajkumarkanna) September 14, 2019