கத்ரீனா கைப், விஜய் சேதுபதி குறித்து கூறிய வார்த்தை.. துள்ளி குதித்த விஜய் சேதுபதி ரசிகர்கள்.!

கத்ரீனா கைப், விஜய் சேதுபதி குறித்து கூறிய வார்த்தை.. துள்ளி குதித்த விஜய் சேதுபதி ரசிகர்கள்.!


katrina-kaif-press-meet-video-viral

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார். கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் நடிகராகவும் நடித்து வருகிறார்.

Katrina

தற்போது பாலிவுட் நடிகர் ராம் ராகவன் தமிழில் இயக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்மஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப், ராதிகா சரத்குமார் போன்ற நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இது போன்ற நிலையில் விஜய் சேதுபதியுடன் நடித்த அனுபவத்தை குறித்து கத்ரீனா கைஃப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு முன்னதாக இருந்தது.

Katrina

அந்த ஆசை தற்போது நிறைவேறிவிட்டது. விஜய் சேதுபதி ஒரு நல்ல நடிகர். விஜய் சேதுபதி அளவிற்கு நடிக்க கஷ்டமாக இருந்தது. இவ்வாறு விஜய் சேதுபதி குறித்து கத்ரீனா கைஃப் பெருமையாக பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.