நான் 4 முறை பீஸ்ட் படத்தை பார்ப்பேன்! ஆனா.. வச்சு செய்த பிரபல நடிகை!! என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வரும் தளபதி விஜய் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக, ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
மேலும் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன், விடிவி கணேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கஸ்தூரி பீஸ்ட் படம் குறித்து பேசியுள்ளது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் கஸ்தூரி, கொரோனாவிற்கு பிறகு மக்களை தியேட்டர்களுக்கு வரவழைப்பது கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள்தான். தமிழ் சினிமா கிடையாது. ஒரு காலத்தில் தமிழில் எடுக்கும் படங்கள் ஹிட்டாகி, மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படும். தற்போது எல்லாமே பான் இந்தியன் படங்களாகிவிட்டது.நான் மிகப் பெரிய விஜய் ரசிகை தான். பீஸ்ட் படத்தை 4 முறை கூட பார்ப்பேன். ஆனால் மற்றவர்கள் ஒரு முறையாவது பார்க்க வேண்டும் இல்லையா.. ரசிகர்களுக்காக மட்டும் படம் எடுத்தால் போதாது. பொது மக்களும் விரும்பும் வகையில் படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.