"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
விஜய் ஆண்டனியுடன் இணையும் பிரபல நடிகை.! அதுவும் என்னவாக நடிக்கவுள்ளார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, நடிகராக களமிறங்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை விஜய் ஆண்டனி. இவர் நான், சலீம், எமன், சைத்தான், பிச்சைக்காரன், திமிரு பிடித்தவன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து கொலைகாரன், அக்னி சிறகுகள் என்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தற்பொழுது தமிழரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும் சோனு சூட் வில்லன் கதாபாத்திரத்திலும், சுரேஷ்கோபி, பூமிகா, சங்கீதா, யோகி பாபு, ரோபோ சங்கர், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இசைஞானி இளையராஜா இப்படத்திற்காக இசையமைக்கிறார். எஸ்.என்.எஸ் மூவி சார்பில் கௌசல்யா ராணி இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிகை கஸ்தூரியும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இதில் கஸ்தூரி டாக்டராக நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.