தமிழகம் சினிமா

விஜய்யின் பேச்சால் சர்ச்சை; தனியார் செய்தி நிறுவனத்தை கலாய்த்த நடிகை கஸ்தூரி..!!

Summary:

kasathuri teases private news channel

சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய நடிகர் விஜய் பல்வேறு கருத்துகளை தெளிவாகவும் அழுத்தமாகவும் தன் ரசிகர்களிடம் பதிவு செய்தார். அவர் மேலும் அரசியல் சார்ந்த ஒரு சில கருத்துகளைப் பற்றியும் பேசி இருந்தார். அவரது பேச்சைப் பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன்வைத்தனர்.

விஜய்யின் பேச்சினை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நடிகை கஸ்தூரி "விஜய்யின் பேச்சு மிகவும் அற்புதமாகவும் அசத்தலாக இருந்தது. அவர் காந்தி மற்றும் அரசியலை  பற்றி பேசும் வரை இதை யாராவது எழுதிக் கொடுத்து இருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்குள் தோன்றியது. ஆனால் அது தவறு, அவர் பேசிய ஒவ்வொன்றும் அவரது உள்ளத்தில் இருந்து எழுந்தது" என்பதை நான் உணர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டிருந்தார்.ஆனால் இதனை பற்றி செய்தி வெளியிட்டிருந்த நிறுவனம் " "சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேச்சை கேட்டேன். அசத்தலான பேச்சு, செம பஞ்ச்!  அவர் காந்தி பற்றியும் அரசியல் பற்றியும் பேசியதை பார்க்கையில் அவருக்கு யாரோ எழுதிக் கொடுத்திருப்பார்களோ என ஆச்சரியப்பட்டேன்" என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆக கஸ்தூரியின் டுவிட்டர் கூற்றுப்படி பார்த்தால் விஜய்க்கு யாரோ மண்டபத்தில் எழுதி கொடுத்திருப்பார்களோ என்ற ஐயம் எழுந்துள்ளது." என்று செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த செய்தியை கண்டு ஆத்திரமடைந்த நடிகை கஸ்தூரி மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஏஷியாநெட்டா  எச்சநெட்டா ?  எழுதி வச்ச டீவீட்டை படிக்க தெரியாத நீங்க மத்தவங்கள பத்தி பேசலாமா? முதலில் நல்ல மொழிபெயர்பாளரை கண்டுபிடியுங்கள்" என்று அந்த செய்தி நிறுவனத்தை கலாய்க்கும் வண்ணமாக பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement