மீண்டும் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ்! ஆனால் இந்தமுறை வேறமாதிரி

மீண்டும் கூட்டணி சேரும் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ்! ஆனால் இந்தமுறை வேறமாதிரி


Karthik subbaraj produces vijay sethupathi

தமிழ் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் அறிமுகமாகி இன்று முன்னனி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று மூலம் இவரை சீனு ராமசாமி கதாநாயகனாக அறிமுகம் செய்தாலும் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான். 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படம் தான் விஜய் சேதுபதியின் சினிமா வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தது. அதன் பிறகும் கார்த்திக் சுப்புராஜ் படமென்றால் எந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி. 

vijay sethupathi

கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டாவில் சிறிய வேடத்திலும், இறைவி படத்தில் கதாநாயகனாகவும் கடைசியில் பேட்ட படத்தில் ஜித்து என்ற முக்கியமான கதாபாத்திரத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாம். ஆனால் இந்தமுறை கார்த்திக் சுப்புராஜ் இயக்குநராக இல்லாமல் விஜய் சேதுபதியின் படத்திற்கு தயாரிப்பாளராக களமிறங்குகிறார். 

vijay sethupathi

இந்த படத்தினை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற படங்களை இயக்கிய பொன்ராம் இயக்க உள்ளாராம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.