அதுதான் என் அண்ணன்! நெகிழ்ச்சி பொங்க கெத்தாக நடிகர் கார்த்தி வெளியிட்ட பதிவு! ஏன் பார்த்தீங்களா!!

அதுதான் என் அண்ணன்! நெகிழ்ச்சி பொங்க கெத்தாக நடிகர் கார்த்தி வெளியிட்ட பதிவு! ஏன் பார்த்தீங்களா!!


Karthi tweet for surya crossing 25 years in cinema

தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் சூர்யா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான மாஸ், சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பு மட்டுமின்றி தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் சிறந்த படங்களையும் தயாரித்து வருகிறார். அகரம் அறக்கட்டளை தொடங்கி அவற்றின் மூலம் பல ஏழைக் குழந்தைகளின் கல்வி ஆசையை நிறைவேற்றி வருகிறார். சூர்யா சினிமா துறையில் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சிறுவயதில் தனது அண்ணன் சூர்யாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப்பெரிய பிளஸாக மாற்ற அவர் இரவும் பகலும் உழைத்தார். தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு மனிதராக, ஏற்கனவே தாராளமாக இருந்த தனது இதயத்தை மேலும் பெரிதாக்கி தகுதியான ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்தார். அதுதான் என் அண்ணன் என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.