கார்த்தி அடுத்து எந்த படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா.?



Karthi next movie update

நடிகர் சூர்யாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்தி, ஆரம்பத்தில் இயக்குனர் மணிரத்னத்திடம்  உதவி இயக்குனராக பணியாற்றினார். 2007ம் ஆண்டு அமீர் இயக்கிய "பருத்தி வீரன்" திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

Karthi

முதல் படமே கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. தொடர்ந்து இவர் நடித்த அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, முன்னணி நடிகராக கார்த்தியை நிலைநிறுத்தியுள்ளன.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் தனது 25ஆவது படமான "ஜப்பான்" படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Karthi

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ராஜ்கிரணுக்குப் பேரனாக கார்த்தி, ஒரு எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார். மேலும்  ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து இப்படம் உருவாக்கப்பட்டு வருக்கிறது.