மாஸாக வெளியானது கார்த்தி 18 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! மிரளவைக்கும் படத்தின் தலைப்பு என்ன?

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் கார்த்தி.
பல வெற்றி படங்களை கொடுத்த இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கார்த்தி நடிப்பில்காதலர் தினத்தன்று வெளிவந்த திரைப்படம் தேவ். பெரும் ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் பூர்த்தி செய்யாத நிலையில் தோல்வி அடைந்தது.
அதனை தொடர்ந்து கார்த்தி தற்போது தனது 18 வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் மேலும் இப்படத்தை இந்த திரைப்படத்தை சூர்யாவின் NGK படத்தை தயாரித்து வரும் ட்ரீம்ஸ் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கவுள்ளனர்.
மேலும் ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களில் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடி என்று யாரும் இல்லை. இந்நிலையில் கைதி என தலைப்பு வைக்கப்பட்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
#Kaithi #கைதி #Karthi #LokeshKanagaraj #Naren pic.twitter.com/c4tl57SDcy
— S.R.Prabhu (@prabhu_sr) 8 March 2019