பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் எப்பொழுது முடியும்?.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?.. வில்லி வெண்பா அளித்த விளக்கம்..!!

பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் எப்பொழுது முடியும்?.. ரசிகர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?.. வில்லி வெண்பா அளித்த விளக்கம்..!!


Kannama Venba Issue

 

விஜய் டிவியில் முன்பெல்லாம் டிஆர்பியின் உச்சத்தில் இருந்த நெடுந்தொடர் பாரதிகண்ணம்மா. ஆனால் ரசிகர்கள் தற்போது பாரதிகண்ணமாவை வெறுத்து, எப்பொழுது முடிக்க போறீங்க? என்று கேட்கும் அளவிற்கு கதைக்களம் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் இணையத்தில் பாரதிகண்ணம்மா சீரியல் முடியப்போகிறது என்றும், பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேரப்போகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், வெண்பா மீண்டும் நாடகமாடி பாரதியிடம் திருமணத்திற்கு சம்பந்தம் வாங்கியுள்ளார்.

vijay tv

இந்த புரோமோவை கண்ட ரசிகர்கள் மிகுந்த மனக்கவலையில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வெண்பா கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபரீனாவிடம், வெண்பா கேரக்டர் பாரதி கண்ணம்மாவில் எப்பொழுது முடிவுக்கு வரும்? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்டுள்ளார். 

vijay tv

அதற்கு பதிலளித்த ஃபரினா "வென்பாவுக்கு எண்டா நெவர்" என்று பதில் அளித்துள்ளார். இதனை கண்ட பலரும் கடுப்பாகி, இந்த சீரியல் இன்னும் 200 ஆண்டுகளானாலும் முடியாது போங்கடா என்று கூறி வருகின்றனர்.