14வது திருமணநாள்! நடிகை கனிகாவின் கணவரை பார்த்துருக்கீங்களா! கியூட் ரொமான்டிக் ஜோடி!!

14வது திருமணநாள்! நடிகை கனிகாவின் கணவரை பார்த்துருக்கீங்களா! கியூட் ரொமான்டிக் ஜோடி!!


kanika-with-husband-video-viral

தமிழ் சினிமாவில் பைவ் ஸ்டார் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கனிகா. அப்படத்தைத் தொடர்ந்து அவர் சேரன் நடிப்பில் வெளிவந்த ஆட்டோகிராப், அஜித் நடிப்பில் வெளிவந்த வரலாறு, எதிரி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட அவர் ஏராளமான மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை கனிகா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருகிறார். இவர் 2008-ஆம் ஆண்டு ஷியாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு சாய் ரிஷி என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் நடிகை கனிகா அண்மையில் தனது 14 வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் தனது கணவருடன் இருக்கும் கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்து அவர், 14 வருடங்கள் ஒன்றாக வளர்ந்துள்ளோம். முட்டாள்தனமான வாக்குவாதங்கள், பைத்தியக்காரத்தனமான சண்டைகள்.. அரவணைப்பில் ஆறுதல் கண்டோம், சில கஷ்டங்களை ஒன்றாக சந்தித்தோம். வெற்றியை ஒன்றாக ருசித்தோம். இன்று எங்களது திருமண நாள்! நன்றி ஷ்யாம், நீங்கள் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாற்றிவிட்டீர்கள் எனக்கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.