என்னது.! இருபது நாட்களுக்கு பல கோடி கேட்கும் கமலஹாசன் .? அதிர்ச்சியில் வாய் பிளக்கும் ரசிகர்கள்.!Kamalhasan asking big amount for twenty days shooting

கடந்த ஆண்டு வெளியான "விக்ரம்" படத்தின் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டால், கமலின் மார்க்கெட் வால்யூ மீண்டும் எகிறியுள்ளது. 300 கோடி பட்ஜெட்டில் உருவான அப்படம், 700 கோடி வசூலித்திருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

kamal

இந்நிலையில், இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கம் படத்தில், நடிகர் பிரபாஸுடன் கமலும் இணைந்து நடிக்கிறார். ஆரம்பத்தில் ப்ராஜெக்ட் கே என்று சொல்லப்பட்ட இப்படத்தின் டைட்டில் "கல்கி 2028 ஏ டி " என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இப்படத்தில், பிரபாஸ், உலகநாயகன் கமலஹாசன் இவர்களுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், பசுபதி ஆகியோரும் நடிக்கின்றனர். விக்ரம் படத்திலேயே கமலின் சம்பளம் 150 கோடி என்று சொல்லப்பட்டது.

kamal

இப்போது, ப்ராஜெக்ட் கே படத்திற்கு 20 நாள் கால்ஷீட்டுக்கு , கமலுக்கு 150கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. வில்லன் கதாப்பாத்திரத்தில் கமலின் நடிப்பைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.