தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
உணவை வேகமாக சாப்பிடுபவர்களா நீங்கள்? அதன் விளைவுகளை அவசியம் தெரிஞ்சிக்கோங்க....

இன்றைய வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறையில் பலர் உணவை வேகமாக சாப்பிடும் பழக்கத்தில் இருக்கின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் சில வினாடிகளில் உணவை முடித்து வேலைக்கு செல்லும் நிலை உருவாகி வருகிறது. ஆனால் இந்த பழக்கத்தால் பலவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மூளை மற்றும் செரிமானத்திற்கு ஏற்படும் தாக்கங்கள்
மூளை நாம் உணவு உண்பதை பதிவு செய்ய சுமார் 20 நிமிடங்கள் நேரம் எடுத்துக்கொள்கிறது. நாம் அதற்கு முன்பே சாப்பிடுவதால், வயிறு நிறைவடைந்தது என்ற சிக்னல் நம்முடைய மூளைக்கு செல்லவில்லை. இதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகிறது.
செரிமான கோளாறுகள் மற்றும் உடல் நல பிரச்சனைகள்
வேகமாக சாப்பிடும்போது, உணவு சரியாக செரிமானம் ஆகாமல் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
வயிற்று உப்புசம்
கேஸ் பிரச்சனை
அசௌகரிய உணர்வு
ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனும் அமில சுழற்சி பிரச்சனை
உணவு தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல்
உடல் எடையும் அதிகரிக்கும்
வேகமாக உணவு சாப்பிடும் பழக்கம் உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது. இது மட்டுமல்லாமல்,
இன்சுலின் எதிர்ப்பு
உயர் ரத்த அழுத்தம்
கெட்ட கொழுப்பு பெருக்கம்
போன்ற வளர்சிதை மாற்ற பிரச்சனைகளும் உருவாகக்கூடும்.
எப்படி உணவை சாப்பிட வேண்டும்
உணவை மெதுவாகவும் கவனமாகவும் சாப்பிடவேண்டும். அதற்கான சில வழிமுறைகள்,
ஒவ்வொரு வாய்க்கும் 20-30 முறை மென்று சாப்பிடவும்
ஸ்பூனை வைத்துவிட்டு மெதுவாக சாப்பிடுங்கள்
டிவி, மொபைல் போன் போன்ற கவனச்சிதறலை உருவாக்கும் சாதனங்களை தவிர்க்கவும்
இதையும் படிங்க: இப்படி செய்தால் காய் சாப்பிடாத குழந்தையும் காய்கறிகள் சாப்பிடும்! இந்த யுக்திகளை யூஸ் பண்ணுங்க...