அந்த அன்புதான் சார் கடவுள்.. புற்றுநோயுடன் போராடும் ரசிகருக்காக நடிகர் கமல் செய்த காரியம்! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!!kamal-talk-to-her-fan-who-struggling-with-cancer-in-abr

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து நடிகர், இயக்குனர், பாடகர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, டான்ஸர் என பன்முகத்திறமை கொண்டு விளங்குபவர் உலகநாயகன் கமல்ஹாசன். அவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவரை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும், அவருடன் பேச வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஏங்குகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வாழ்ந்து வரும் சாகேத் என்பவர் கமலின் தீவிர ரசிகராவார். இவர் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 3வது ஸ்டேஜில் உள்ளார். அவருக்கு நடிகர் கமல்ஹாசனுடன் பேச வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. இதனை அறிந்த அவரது நண்பர்கள் எப்படியாவது அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டுமென முயற்சி செய்துள்ளனர். அதனைத்தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனுடன் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் கமல்ஹாசன் வீடியோ காலில் வந்ததும் அவரை கண்டு சாகேத் இன்ப அதிர்ச்சியில் துள்ளி குதித்துள்ளார். பின்னர் அவருடன் பேசிய கமல் அவருக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் உற்சாகமூட்டி பேசியுள்ளார். அப்பொழுது சாகேத் தனது மகனுக்கு கமலின் படமான விருமாண்டியின் பெயரை வைத்துள்ளதாக கூறியுள்ளார். அவர் நோயுடன் போராடுவது குறித்து பேசுகையில் கமல் கண்லங்கியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது.