இந்தியன் 2 மீண்டும் தொடங்குமா? உண்மையை உடைத்த உலகநாயகன்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!Kamal talk about indian 2 shooting start

உலகநாயகன் கமல் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இருந்து பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளது. அதற்கான புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கமலிடம், இந்தியன் 2 படம் கைவிடப்பட்டுவிட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

indian 2

அதற்கு கமல், இந்தியன் 2 திரைப்படத்தை கண்டிப்பாக மீண்டும் தொடங்குவோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருகிறது எனக் கூறியுள்ளார். பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்பு தளத்தில் விபத்து, கொரோனா, 
படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே தகராறு என பல காரணங்களால் இரண்டு வருடத்திற்கு மேல் நிறுத்தப்பட்டுள்ளது.