கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
பார்த்த முதல் நாளே பாடல் நடிகையை ஞாபகம் இருக்குதா.. கமல் பட நடிகை இப்படி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!

கோலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் கமலஹாசன். இவர் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தனது நடிப்பு திறமையின் மூலம் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி இருக்கிறார்.
நடிப்பின் உச்சத்தில் இருக்கும் கமலஹாசன் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்து இவருக்கு பெயர் பெற்று தந்தது. இதனையடுத்து தற்போது சங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுபோன்ற நிலையில், கமல் நடிப்பில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தில் பார்த்த முதல் நாளே என்ற பாடல் மிகப் பிரபலமானதாக இருந்தது. இப்பாடலில் ஒரு சில காட்சிகளில் நடித்த நடிகை கமலினி. இவர் இப்படத்திற்கு பின்பு பட வாய்ப்பு இல்லாமல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் கமலினி. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் உடல் எடை அதிகமாகி வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.