உலக நாயகன் கமலின் விக்ரம் படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா... உற்சாகத்தில் படக்குழு!!

உலக நாயகன் கமலின் விக்ரம் படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா... உற்சாகத்தில் படக்குழு!!



Kamal Hassans Vikram movie World wide box office collection in Tamil Nadu

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.

Kamal Hassan

இந்நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படமாக கமல்ஹாசனின் விக்ரம் படம் அமைந்துள்ளது. 13 நாட்களில் தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் ரூ. 138 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.