படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடிகர் கமல் வேதனையுடன் வெளியிட்ட அறிவிப்பு! சோகத்தில் திரையுலகம்!

படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களுக்காக நடிகர் கமல் வேதனையுடன் வெளியிட்ட அறிவிப்பு! சோகத்தில் திரையுலகம்!



kamal announcement about shooting spot accident dead

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்2. இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கிறார். மேலும் இவருடன் காஜல் அகர்வால் ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதற்காக சென்னை அருகே பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக கிரேன்கள் மூலம் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்  படப்பிடிப்பு தளத்தில் செட் அமைக்கும் பணியின்போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

indian 2

இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தப்பிறகு  செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது என் குடும்பத்தில் நடைபெற்ற விபத்து. இந்தத் தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விபத்து நடந்துள்ளது. 100 கோடி , 200 கோடி ரூபாய் வசூல் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பை அளிக்க முடியவில்லை என்பது அவமானகரமான ஒன்றாக உள்ளது.

என்னால் முடிந்தது, காயமுற்றவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் ஒரு கோடி ருபாய் அளிக்கிறேன். இது முதலுதவிதான், பரிகாரம் கிடையாது . எவற்றை கொண்டும் உயிரிழப்பை ஈடுகட்ட முடியாது. இனி படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்குக் கூட பாதுகாப்பு இருக்க வேண்டும். சினிமாவில் காப்பீடு இருக்க வேண்டும். அதற்கு முழுதுறை பங்கேற்க வேண்டும். அது நமது கடமை. நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். 4 நொடிகளுக்கு முன்புவரை நான் அங்குதான் இருந்தேன். மயிரிழையில்தான் நானும் இயக்குநரும் உயிர் தப்பியுள்ளோம். எனக்கு பக்கத்தில்தான் விபத்து நடந்தது என்று தெரிவித்துள்ளார்.