சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்! யார் தெரியுமா?


kalyani-priyadharsan-casting-with-sivakarthikeyan-in-sk

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் Mr.லோக்கல். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

sivakarthikeyan

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் படம் வரும் மே 1 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Mr.லோக்கல் படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில் தனது அடுத்த படமான SK14 படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

sivakarthikeyan

மேலும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது தந்தை ப்ரியதர்ஷன் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.