வாவ்.. செம கியூட்! கர்ப்பமாக இருக்கும் காஜல் வெளியிட்ட வீடியோவை பார்த்தீங்களா!! சும்மா வேற லெவலில் இருக்காரே!!



kajal-latest-photoshoot-video-viral

தமிழில் பழனி படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து எக்கச்சக்கமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகி இருந்தார். ஆனால் பின்னர்   கர்ப்பமடைந்த நிலையில் அவர் ஒவ்வொரு படங்களிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் காஜல் அவ்வபோது தனது கர்ப்பகால புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கியூட்டான உடையில், நடத்திய அழகிய போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.