சினிமா

புதிய அவதாரமெடுக்கும் காஜல் அகர்வால்.! செம குஷியாக என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Summary:

kajal agarwal goes to act in webseries

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.  இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

kajal agarwal க்கான பட முடிவு

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும் தெலுங்கில் ரணரங்கம் என்ற திரைப்படத்திலும் காஜல் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த இரு திரைப்படமும் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் அதிக படங்களில் நடித்துள்ள நான் சவாலான புதிய விஷயங்களில் ஈடுபட எப்போதுமே தயாராக இருப்பேன். அவ்வாறு இந்த புதிய பயணத்தை தற்போது துவங்கவுள்ளேன்.

காஜல் அகர்வால் க்கான பட முடிவு

சமீபகாலமாக வெப் தொடர்கள் பிரபலமாக  உள்ளது. நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க துவங்கியுள்ளனர். அதுபோல் நானும் வெப் உலகத்துக்குள் நுழைய இருக்கிறேன். வெங்கட் பிரபு புதிதாக எடுக்கும் வெப் தொடரில் நடிக்கிறேன். இது 10 தொடர்களாக வெளிவரும். இதன் படப்பிடிப்பு ஆகஸ்டில் தொடங்கி செப்டம்பரில் முடிவடையும். என கூறியுள்ளார்.


Advertisement