சினிமா

ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...!

Summary:

kaatrin-mozhi-release-date-changed

தமிழ் சினிமாவில் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ மற்றும் எஸ்.ராஜ் படம் என 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது. லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தை பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்செயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

முதலில், படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். தற்போது, படத்தின் ரிலீஸை நவம்பர் மாதம் தீபாவளிக்கு பிறகு ஒத்தி வைத்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் வருகிறது. அக்டோபர் 18ல் படத்தை வெளியிட யோசித்தோம். ஆனால் அதே நாளில் வெளியாகும் படங்களை (வடசென்னை, சண்டகோழி, திருப்பதிசாமி குடும்பம், எழுமின், அண்டாவக் காணோம்) பற்றி தெரிந்த பின், எங்கள் படத்திற்கு தகுந்த அளவிளான திரைகளும், காட்சிகளும் கிடைப்பது சிரமம் எனப் புரிந்தது. எனவே படத்தை தீபாவளிக்கு பிறகு வெளியிட திட்டமிட்டுள்ளோம்" என ட்வீட் செய்துள்ளார்.

 

#KaatrinMozhi release date: it's raining new films week after week. We scheduled for October 18 but looking at the list approved, it will be a hard battle to get proper theatres/shows. So we're postponing the release to November, post Diwali. Will keep you updated. Thank you 🙏 pic.twitter.com/n6XiYdMxRU

— Dhananjayan BOFTA (@Dhananjayang) October 3, 2018

 

 


Advertisement