இதெல்லாம் ஒரு பொழப்பா?? மீனா கணவர் மரணத்தை வைத்து பணம் சம்பாதிக்குறான்.! வெளுத்து வாங்கிய பிரபலம்.!

இதெல்லாம் ஒரு பொழப்பா?? மீனா கணவர் மரணத்தை வைத்து பணம் சம்பாதிக்குறான்.! வெளுத்து வாங்கிய பிரபலம்.!


K rajan scold payilvan ranganathan

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.  இந்நிலையில் நுரையீரல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் ஜூன் 28ந் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில் கணவரை இழந்து தவித்த நடிகை மீனாவிற்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறினர். இந்நிலையில் பல நடிகர், நடிகைகள் குறித்தும் மோசமான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன் வித்யாசாகர் மரணம் குறித்தும், மீனா குறித்தும் பல அவதூறு கருத்துகளை பரப்பி வந்தார். 

இந்நிலையில் தெற்கத்தி வீரன் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் டாப் ஸ்டாராக வலம் வந்த மீனா குணத்தில் நல்ல பொண்ணு. இளம்வயதில் கணவனை இழந்து  தவித்து வருகிறார், அப்பாவை இழந்து குழந்தை நைனிகாவும் தவித்து வருகிறார்.  ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் மீனாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

K rajan

ஆனால் மீனா கணவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி யூடியூபர் ஒருவர்  பணம் சம்பாதிக்கிறார். பயில்வான் ரங்கநாதனைதான் கூறுகிறேன். மீனாவின் கணவர் இறந்தது குறித்து மருத்துவ அறிக்கை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறான். உனக்கு என்னடா அடங்கமாட்டியா? என எச்சரித்துள்ளார். பணம் வேண்டும் என்பதற்காக அடுத்தவன் சாவில் வியாபராம் செய்யாதே.

போலீசில் புகார் அளித்தும் இதுவரை பயில்வான் ரங்கநாதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே விட்டுவிட்டால், அவரும் தான் செய்வதெல்லாம் சரி என அடுத்தடுத்த பெண்களையும் நடிகைகளையும் இழிவாக பேசுவார். யாராக இருந்தாலும் தாய்மார்களையும், நல்லவர்ளையும் புண்படுத்துவது மிகப்பெரிய பாவம் என கூறியுள்ளார்.