'ஆடி மாசம் ஆடி வருகிறாள்' பிக்பாஸ் ஜூலியின் வித்தியாசமான தோற்றங்கள்

'ஆடி மாசம் ஆடி வருகிறாள்' பிக்பாஸ் ஜூலியின் வித்தியாசமான தோற்றங்கள்


julie-amman-thayi-song-release

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வெளிஉலகிற்கு தெரிய வந்த ஜூலி, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இதன் பிறகு பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளான ஜூலி தற்பொழுது "அம்மன் தாயி" என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அம்மனின் மகிமைகளை விளக்கும் வகையில்,அம்மன் தாயி என்ற பெயரில் பக்தி கலந்த ஒரு சமூக படமாக தயாராகி வரும் இந்த படத்தில் கதாநாயகியாகவும், அம்மனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் பிக்பாஸ் புகழ் ஜூலி.

amman thaaye movie

புதுமுகம் அன்பு காதாநாயகனாகவும், சரண் வில்லனாகவும் நடிக்கின்றனர். மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் இந்த திரைப்படத்தை தயாரிக்கயுள்ளனர்.

"அம்மன் தாயி" திரைப்படத்தை பற்றி இயக்குநர் மகேஸ்வரன் மற்றும் சந்திரஹாசன் கூறியதாவது 'அம்மனின் சக்தியை கட்டுப்படுத்தும் வில்லனை எப்படி அம்மன் பழிவாங்கிறார்? என்பதுதான் படத்தின் கதை. கோவில்களில் முளைப்பாறி எடுப்பது என்பது காலங்காலமாக தமிழர்களின் அடையாளமாக இருந்து வருகிறது. அந்த முளைப்பாறியில் இருந்து அம்மன் எப்படி வருகிறார்? என்பதை படத்தில் ஒரு முக்கிய காட்சியாக அமைக்கப்பட இருக்கிறது. 

amman thaaye movie

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது என்று இருவரும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘அழைக்கட்டுமா தாயே’ என்ற பாடல் வரிகளை கொண்ட வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோவில் ஜூலியின் பல்வேறு விதமான தோற்றங்களும் வெளியிடப்பட்டுள்ளன.