ஓயாமல் உழைக்கும் ஜோதிகா! பூஜையுடன் துவங்கியது அடுத்த படம்



Jothika next movie started with pooja

நடிகை ஜோதிகா திரைக்குடும்பத்தில் பிறந்து திரைக்குடும்பத்தின் மருமகளாக வாழ்ந்து வருபவர். பிரபல நடிகை நக்மாவின் சகோதரியான இவர் 2006 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை மணந்தார். 

தமிழ் சினிமாவின் அனைத்து முண்ணனி நடிகர்களுடன் நடித்துள்ள ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி நல்ல மனைவியாகவும் மருமகளாகவும் மட்டுமே இருந்து வந்தார். சூர்யா-ஜோதிகா தம்பதியினருக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

jothika

நீண்ட நாட்கள் ஓய்விற்கு பிறகு ஜோதிகா 2015 ஆம் மீண்டும் தமிழ் சினிமாவில் தடம் பதித்தார். முன்பு போல் இல்லாமல் தன் கதாபாத்திறத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாய் தேடி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியான 36 வயதினிலே, நாச்சியார், காற்றின் மொழி போன்ற படங்கள் பல பெண்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது. 

இந்நிலையில் 40 வயதான ஜோதிகா இன்னும் ஓயவில்லை. அடுத்ததாக 2D எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ரேவதி, யோகிபாபு, மன்சூர் அலிகான், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டார். மணைவியின் திறமை வீட்டிற்குள்ளே அடைப்பட்டுவிடாமல் கூடவே இருந்து பக்கத்துணையாக இருக்கும் சூர்யா பலருக்கு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறார்.