சினிமா

ஏடாகூடமா செஞ்சு கையை உடைத்துக்கொண்ட ஜெனிலியா.. வைரலாகும் ஷாக் வீடியோ..

Summary:

கீழே விழுந்து தனது கையை உடைத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஜெனிலியா.

கீழே விழுந்து தனது கையை உடைத்துக்கொண்ட வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் ஜெனிலியா.

பாய்ஸ் திரைப்படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா. பாய்ஸ் திரைப்படத்தை அடுத்து ஜெனிலியாவுக்கு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.

விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவி நடிப்பில் சந்தோஷ் சுப்ரமணியம், தனுஷ் நடிப்பில் உத்தமபுத்திரன் போன்ற வெற்றிப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் பல்வேறு படங்களில் நடித்துவந்த இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை காதலித்து 2012-ல் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இருமகன்கள் உள்ளனர்.  தற்போது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஜெனிலியா.

இந்நிலையில் ஜெனிலியா தன்னுடைய குழந்தைகளுக்காக ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டு இருக்கிறார். தான் ஸ்கேட்டிங் செய்வதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் வாங்க விரும்பிய ஜெனிலியாவுக்கு தற்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது.

ஆம், ஸ்கேட்டிங் செய்யும் போது அவர் தவறி கீழே விழுந்ததில் அவரது ஒரு கை உடைந்துவிட்டதாம். இதனை தற்போது வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜெனிலியா.


Advertisement