11 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு! உற்சாகத்தில் ஜீவா ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தனது தந்தை ஆர்பி.செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆசை ஆசையாய் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜீவா. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான வெற்றித் திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் ஜீவா கடைசியாக ஜிப்ஸி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு தனது தந்தையின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் காஷ்மீரா பர்தேஷி,விடிவி கணேஷ், சித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது.
இந்த படத்தை இயக்குனர் சசியிடம் உதவியாளராக பணியாற்றிய சந்தோஷ்ராஜன் என்பவர் இயக்கவுள்ளார். நடிகர் ஜீவா இறுதியாக தனது தந்தையின் தயாரிப்பில் ரௌத்திரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது