பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய ஜெயம் ரவி.. கிசுகிசுக்கும் திரைத்துறை வட்டாரம்.?

கோலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் 'ஜெயம்' ரவி. இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய 'ஜெயம்' திரைப்படத்தில் அறிமுகமானதால், அப்படத்தின் பெயரையே தன் பெயரிலும் சேர்த்துக்கொண்டார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" இரண்டு பாகங்களிலும், அருள்மொழிவர்மனாக நடிப்பில் மிரட்டியிருந்தார், ஜெயம் ரவி. தொடர்ந்து இந்த வருடம் ஜெயம் ரவியின் மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
நயன்தாராவுடன் 'ஜெயம்' ரவி நடித்துள்ள "இறைவன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில வருடங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், வரும் செப்டம்பர் 28ம் தேதி ரிலீசாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து பிரியங்கா மோகனுடன் ஜெயம் ரவி நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படம், நவம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா வுடன் ஜெயம் ரவி நடிக்கும் "சைரன்" திரைப்படம் டிசம்பர் 22ம் தேதி ரிலீசாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனை அடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகியுள்ளதால் ஜெயம் ரவியின் சம்பளம் உயர்ந்து விட்டதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது