அந்த படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.! ஜனகராஜ் பெருமிதம்.!

அந்த படம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.! ஜனகராஜ் பெருமிதம்.!


janakaraj talk about unforgettable movie

ஒரு காலத்தில் கமல் , ரஜினி நடிக்கும் அனைத்து படங்களிலும் நடித்தவர் ஜனகராஜ். கவுண்டமணி செந்தில் காமெடியை எந்த அளவுக்கு ரசித்தார்களோ அந்த அளவிற்க்கு ஜனகராஜின் நகைச்சுவை ரசிகர்களின் மனதை கவர்ந்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இவரைப் பற்றி சொன்னாலே முதலில் நமக்கு ஞபாகத்துக்கு வருவது, 'என் தங்கச்சியே நாய் கட்சிடிச்சிப்பா' அப்பிடிங்குற டயலாக்கும், என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா.. அப்பிடிங்குற டயலாக்கும் தான்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படத்தில் விகே ராமசாமி மற்றும் ஜனகராஜ் கூட்டணியில் நகைச்சுவை காட்சிகள் அனைவரையும் சிரிக்க வைத்து வேற லெவல் ஆக அமைந்தது. அக்னி நட்சத்திரம் படத்தில் மனைவியை ஊருக்கு அனுப்பும்போது போகாத தங்கமணி என கண்ணீர் விட்டு அழுது மனைவி சென்றதும் என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா.. என மகிழ்ச்சியில் ஜனகராஜ் குதிக்கும் காட்சி தான் வேற லெவல்.

இந்தநிலையில் ஜனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், "அக்னி நட்சத்திரம் - எனது வாழ்க்கையில் மறக்க முடியாத படம்! நோ தங்கமணி, என்ஜோய்.." என அவரது புகைப்படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.