விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தி வழங்கிய வாரிசு... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

விஜய் ரசிகர்களுக்கு இன்ப செய்தி வழங்கிய வாரிசு... ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு... உற்சாகத்தில் ரசிகர்கள்!!


Jan 11 varisu movie release

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்து காணப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷ்யாம்,ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தணிகை குழு யூ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தை குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்த்து மகிழலாம். 

Varisu movie

வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது வாரிசு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.